தென்றலே நீவந்து செப்பு

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

ர்த்த ஒருகணத்தில் பல்லா யிரந்தடவை
கூர்த்தவிழி வேல்கொண்டு குத்தியவள் - ஆர்த்தவலி
கொன்றுவிடும் முன்னென்னைக் கொண்டணைத்துக் கொள்வாளோ
தென்றலே நீவந்து செப்பு!

சிந்தை சிதைந்துவிடச் செய்கை தடுமாற
வந்துற் றெனைவருத்தும் நோயானாள் - சொந்தமென
ஒன்றி உயிராகி; ஓர்மருந்தென் றாவாளோ
தென்றலே நீவந்து செப்பு!

பொன்னுருக்கி வார்த்தெடுத்த பொங்குமிள மங்கையவள்
கன்னல் மொழிபேசிக் காதலித்தாள் - என்னுயிரைத்
தின்றுவிட்டுச் சென்றாளே தேடி வருவாளா
தென்றலே நீவந்து செப்பு!




 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்