உன்னை
கவிஞர் நாகை ஆசைத்தம்பி
உன்னை
நிலாவென்று சொல்லமாட்டேன்
தினந்தோறும் காணமுடியாது
என்பதால்,,,,
உன்னை
மலரென்று சொல்லமாட்டேன்
வாடிப்போகும் என்பதால்,,,,
உன்னை
தென்றலென சொல்லமாட்டேன் சிலநேரம்
புயலாகும் என்பதால்,,,
உன்னை
கவிதையென சொல்லமாட்டேன்~எல்லோரும்
விமர்ச்சிப்பார்கள் என்பதால்,,,
உன்னை
இதயமென்று சொல்லமாட்டேன் எப்பொழுதாவது
மாற்றப்படலாம் என்பதால்,,,
உன்னை
என் உயிரென்று சொல்வேன்
என்னோடு கலந்து
என்னோடு முடிவாய் என்பதால்,,,,!!!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|