ஹைக்கூ கவிதைகள்

முனைவர் வே.புகழேந்தி, பெங்களூரு.


மின்னல்
வெளிச்சமிட்டு காட்டுகிறது
எரியா தெரு விளக்கு.

வெறிச்சோடி கிடக்கிறது
வைரமோதிரக் கடைத் தெரு.
முழு சூரிய கிரகணம்.

வீதியில் இனக்கலவரம்.
அஞ்சிக்கொண்டே கடக்கிறது
தெருநாய்.

காத்திருக்கிறது/
தெருக்கோடியை தேர் கடக்கும் வரை/
இறுதி ஊர்வலம்./

னக்கலவரம்
மெல்ல அடங்குகிறது
தொடர் மழை.

மீண்டும் தொடர்கிறது
மேகம் காணும் ஆசை
பொழிகையில் அடை மழை.

வறி விட்டுச் செல்கிறது/
கையோடு கொண்டு வந்த பூங்காற்றை -/
மழை. /

ண்ணம் பெறுகிறது
மண்ணைப் புணர்ந்த
மழை.

விடைப் பெறுகிறது
காட்சிகளை மாற்றியமைத்தவுடன்
மழை.

தேங்கிய நீரில் குதிக்கிறது/
மின்னல் வெட்டியதும்/
இலையின் நுனியில் தொங்கிய
மழைத்துளி/

தொடர்ந்து ஒலிக்கிறது
பணி ஓய்வுப் பெற்ற அப்பாவின்
தொழிற்சாலை சங்கு.

நின்றவாரே பயணிக்கிறான்
குளிர் கண்ணாடி அணிந்த
பார்வையற்றவன்.

செவ்வக வடிவில் நீந்துகின்றன
கண்ணாடி தொட்டியிலிருந்து
கடலில் கொட்டிய மீன்கள்.

தொடரும் நன்னடத்தை-
மரக்கன்று நடுகிறான்
விடுதலையான ஆயுள்கைதி.

சிறை வளாகச் சுவற்றை
தாண்டி வெளியேறுகிறது
விடுதலையடையா மரக்கிளை.

நிலத்தின் நீதிமன்றத்தில்
வழக்கு பதிவிற்கு எதிர்ப்பு -
கடல் கொள்ளையர்கள்.


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்