நெஞ்சமே
அஞ்சாதே நீ
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
அடிமையிருள்
சூழ அடங்கி முடங்காதே
விடியும்நாள் வாராமல் போகா - கொடியதொரு
வெஞ்சிறையி லிட்டுன்னை வீழ்த்த நினைத்தாலும்
நெஞ்சமே அஞ்சாதே நீ!
சாக்கடையாய்
நாறும் சமுதாயச் சீர்கேடைப்
போக்கத் துணிந்தெழுந்து போராடு – தீக்குள்ளே
நஞ்சை எறிவதற்கும் நல்லவற்றைக் காப்பதற்கும்
நெஞ்சமே அஞ்சாதே நீ!
காட்டு
விலங்குகளும் காக்கு மொழுக்கமுண்டு
நாட்டிற் சிலமனிதர் நாய்களைப்போல் - கூட்டாகக்
கஞ்சக் கயவரைக் காமுகரைத் தீர்த்தொழிக்க
நெஞ்சமே அஞ்சாதே நீ!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்