ஹைக்கூ கவிதைகள்
முனைவர் வே. புகழேந்தி,
பெங்களூரு.
முறிந்து
துண்டாகிறது
மாலை சூரியன் பெயர்க்கையில்,
மர நிழல்.
சுருதியை
கடத்திச் செல்கிறது
மிதக்கும் இலை -
பரிதவிப்பில் பாடகன்.
கிழிக்கப்பட்டுள்ளது
பௌத்த மட அகராதியிலிருந்து
'ஆசை' சொல்லுக்கான பக்கம்.
பிரியா
விடை அளிக்கிறது
விடுதலை அடையும் கைதிக்கு -
சீருடை
கடிப்படாமல்
வெளியேறுகிறது
'நாய்கள் ஜாக்கிரதை' வீட்டிலிருந்து
மாலை வெய்யில்.
கோடைக்காலம்
-
காலிக்குடத்துடன் வருகிறாள்,
சாணைப் பிடிக்க.
தப்பி
விடும் மீன்கள்,
கொக்கொன்று காலுயர்த்துகையில்.
அருகில் தூண்டில்காரன்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|