லிமரைக்கூகள்

முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.



மிழால் ஆண்டான் இப்புவி
அச்சமின்றி மனம் திறந்து பாடியதால்
அவனே என்றும் மகாகவி.

டைந்த உடன் பனிக்குடம்
ஆரம்பம் ஆகிடும் சிசுவின் பயணம்
மழலையின் அழுக்குரல் இனித்திடும்.

தீவிரமாய் நேசித்தால் மதுவை
ஒன்றல்ல ஒருநாள் உன் மனைவி
ஆகி விடுவாள் விதவை.

டுக்க வேண்டுமெனில் டெங்கு
கொசு ஒழிப்பில் கவனம் செலுத்தி
ஆற்றிடு உன் பங்கு.

மூன்றாம் ஞானபீடம் தமிழுக்கு
அளிக்காமல் இன்னும் தாமதம் செய்வது
நம் இலக்கியத்திற்கு இழுக்கு.

போட்டு பிள்ளையார் சுழி
தொடங்கிய காரியம் தோல்வி அடைந்தால்
சுமப்பான் கணபதி பழி.

போட்டியில் வென்ற களிப்பா?
கவிதை இயற்றிட நேரமில்லை என்று
புனையத் தொடங்கினாயா துளிப்பா?

ஞ்சக் காலத்தில் கொக்கும்
நீரின்றி வற்றிய குளங்களை துறந்து
பறந்திடும் எட்டு திக்கும்.

டிப்போனாள் தாய் மலைப்பால்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இலயித்த குழந்தை
பருக மறுக்கிறது முலைப்பால்.

சேவை எவ்வாறிருக்க வேண்டுமெனில்
பாடம் நடத்திட என்றும் ஆயத்தம்
மா மரத்து அணில்.

ட்டு வழிச் சாலை
எதிர்பார்த்து காத்திருக்கிறான் ஏழை ஓவியன்
ஆரம்பம் ஆகும் நாளை.



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்