ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் இரா.இரவி
வழிவது
கண்ணீர் அல்ல
செந்நீர்
மரம் அறுக்கையில் !
நூற்றாண்டுகள்
கடந்தும்
கம்பீரமாக நிற்கின்றன
வெள்ளையர் காலத்து கட்டிடங்கள் !
சில
ஆண்டுகளில்
விரிசல் விழுந்துள்ளன
அரசியல்வாதிகளின் கட்டிடங்கள் !
வழங்கப்படவில்லை
வாங்கப்படுகின்றன
விருதுகள் !
சீர்தூக்கி
சிந்தித்தால்
நடக்காது
தற்கொலை !
சாக
பல வழிகள் இருக்கையில்
வழிகள் உண்டு
வாழவும் !
நினைவு
நாளில் மட்டும்
நினைக்கப்படுபவனல்ல
மகாகவி பாரதி !
பிறர்
சொல்வதை கேட்காவிடினும்
மனசாட்சி சொல்வதை கேள்
சிறப்பாய் வாழ்வில் !
வேண்டாம்
தன்னலச்சீற்றம்
நல்லவருக்கு வேண்டும்
பொதுநலச்சீற்றம் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|