இது
மரணம்
சம்பவித்த
வீடு
பிரபு
சுற்றமும்
சூழமும்
சோகத்தோடு
நிற்க
அழுதுகொண்டிருக்கிறார்கள் -
என்
அன்பு
மனைவியும்
மகளும்
கலங்கி
நிற்கிறான்
மகன்
அள்ளி
அணைத்து
ஆறுதல்
மொழி
சொன்னேன்
வாழ்நாளெல்லாம்
காட்டாத
அன்பை
காட்ட
முயன்றேன்
- ஆனால்
என்
மொழி
புரியவில்லை
அவர்கட்கு
வேறு
என்ன
செய்ய
முடியும்
கண்ணாடி
பெட்டிக்குள்
கிடக்கும்
என்னால்...?...!
....?...!
priyamudan.prabu83@gmail.com
|