தன்முனைக் கவிதைகள்
கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம்
செய்யாறு
எனக்கு
முன்னே
நடந்து சென்றாலும்
உனக்கான பாதை
என்னிடம் உள்ளது
குடைக்குள்
மழை
என்பதை அறிவேன்
மனதில் ஏன் இத்தனை
காய்ச்சல் தெரிகிறது?
இது
யாருக்கான
பேருந்து நிறுத்தம்?
அவளின்றி என்னால்
இறங்கமுடியவில்லை
பார்த்து
பார்த்து வாங்கிய
ரோஜா மலரில் தெரிகிறது
உனது புன்னகையின்
ரகசிய மொழி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|