ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு வாழ்த்து

ருத்ர

புல்லென விரிந்த வியன் வான் கீற்றில்
வால் வெளி வெள்ளம் படு மணி கதிர‌
பசுங்குடை கவித்த கான்மறை சிலம்ப‌
கல்லிடை முயங்கி மஞ்சுகள் துயில‌
கோழியும் குருகும் அஞ்சிறை சிலிர்ப்ப‌
நளி இரும் அலைகள் மாஆநிலம் அளைய
துறைதொறும் நாறும் பெருங்கயல் கிடப்ப‌
குமரிக்கரையில் குமிழிக்காடாய்
சிறுநுரைக்கூட்டம் செய்யுள் பெய்ய‌
புன்னிற்றிளம் வருடை பொறிகள் காட்டி
துள்ளுப‌ போல் ஒரு புத்த‌ம் ஆண்டு
அள்ளும் ஆயிர‌ம் க‌ன‌வுக‌ள் ம‌ன்னே!
ஈராயிர‌ம் விழுங்கிய‌ பின்னும்
பத்தாவ‌தாய் வாய்பிள‌ந்து நிற்கும்.
ஈச‌ல்க‌ள் குவிய‌ல் ஒளியுண்ண‌ விரையும்.
ஈண்டு இழையா நின்று ஆறு ம‌றைத்து
நீள் இருள் கொடுங்கை காட்டியே நிற்கும்.
நாரையின் கூர‌ல‌கு அல‌வ‌ன் கிழிக்கும்
காட்சி க‌ண்ட‌ன்ன‌ மாட்சியின் நிறைவ‌ம்.
இட‌ர்க‌ள் உடைக்கும் ம‌ள்ள‌ல் ம‌ற‌வ‌ர்
நெஞ்ச‌ம் போலொரு நெடுங்க‌திர் ப‌ட‌ர்க‌.
எழுத‌ரு ம‌திய‌ம் க‌ண்டு பொங்கு பேர‌லை
ஓங்க‌ல் பொய்க்கும் உயரம் காட்டும்.
அத்திறத்தாலே எத்திறமும் வெல்வம்.


epsivan@gmail.com