ஹைக்கூ கவிதைகள்
முனைவர் வே. புகழேந்தி,
பெங்களூரு.
மருமகளின்
சீதனத்துடன்
வந்திறங்குகிறது
பெற்றோரின் அறிவுரை.
முகூர்த்த
நேரம் -
கண்ணீரில் பெண்ணின் தந்தை
விற்ற வீட்டின் நினைவு.
காற்றை
எதிர்த்தது
பட்டாம் பூச்சி சிறகினில்
படிந்த மண்.
பிணத்தை
புதைக்கும் முன்
குழிக்குள் படுத்து கிடக்கிறது
மழை நீர்.
வழித்தடம்
முழுவதும்
பயணச்சீட்டின்றி பிரயாணிக்கும்
பேருந்தின் எஞ்சின்.
முதியோர்
இல்லம் செல்லும்
தருணத்தை பறைசாற்றிடும்
அம்மாவின் இடைவிடா இருமல்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|