ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் நாகை ஆசைத்தம்பி கோவை


குழந்தை அழுகிறது
தாய் சிரிக்கிறாள்
சுகப்பிரசவம்,,!

சில்லரை வசூலிக்க
இயங்குகிறதோ,,,?!
நகர பேருந்து.

சில்லரை சில்லரை
தாங்கமுடியவில்லை
நடத்துனர் அலப்பரை,

சேமித்த உணவு
வீணாய் கிடக்கிறது
குப்பைத்தொட்டி,,,!

தீண்டாமை ஒழிய
நிரந்தர தீர்வு
பொதுவுடமை சிந்தனை

தேடுங்கள் கிடைக்கும்
நம்பிக்கையை தருகிறார்
கூகுள் நிறுவனர்,,,!

 

கவிஞர் நாகை ஆசைத்தம்பி
2/67 பாம்பே நகர்
நரசிம்ம நாயக்கன் பாளயம்
கோவை -31

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்