ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் அன்பழகன்ஜி
எறும்பு
வளை நோக்கி
மெல்ல ஊர்ந்து போகிறது
அரிசிமா கோலம்.
கோவில்
வாசல்
பக்தனை நம்புகிறான்
பிச்சைக்காரன்.
தவளையற்ற
குளம்
தத்தித் தாவி ஓடுகிறது
விட்டெறிந்த ஓட்டாஞ்சல்லி
பாலைவன
மணல்
உச்சி வெயிலில் ஊர்கிறது
ஒரு பறவை.
பாறையில்
மோதி
சிதைந்து போகின்றன
நீரோடு வரும் பூக்கள்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்