நீட்டித்து
நிற்கும் நிலைத்து!
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
தன்முனைப்பைத்
தற்செருக்கைத் தானென்ற ஆணவத்தை
முன்நிறுத்தி வாழ முனையாதே – அன்புநெறி
நாட்டிவைக்கும் நற்செயல்செய் நாடறிய நின்பெருமை
நீட்டித்து நிற்கும் நிலைத்து!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்