மழை மனம்
கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன்
இதற்கு
முன்
எப்போதும் உன்னை நான்
பார்த்ததில்லை
அந்த மழை மட்டும்
வராதிருந்திருந்தால்
நீ யாரோ
நான் யாரோ
உனக்கென்றும்
எனக்கென்றும்
தனித்தனியே
பெய்வதில்லை மழை
பெய்ததில்
இருவரும் தான் நனைந்து போனோம்
பொதுவில் பெய்த மழையில்
குளிர்ந்து போனது
இந்த நிலம் மட்டுமல்ல
நம் மனமும் தான்
என்னை தொட்டோடி வந்த மழை
உன்னையும் தொட்டது
என் மனம் மட்டும் சுட்டது
உன் பார்வை மின்னலில்
இடியோசை கேட்ட நாகமாய்
அடங்கியது மனம்
அட
நம் மழையில் ஏது
உன் மழை
என் மழை
அப்படி சொல்வது
காதல் பிழை
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|