ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் அன்பழகன்ஜி


காகம் இரையூட்ட
குஞ்சுகள் கொத்துகின்றன
நிலவை

ழைக்காய் எடுத்துப்போய்
வெயிலுக்குப் பிடித்துவந்தான்
குடை.

காகம் அமர
சிறகுகள் விலகி ஓடின
காலடியில் ஈசல்கள்.

முள் குத்தியது
அகற்றக் குனிந்தால்
அழகிய நெருஞ்சிப் பூ

பூக்காத செடியில்
அமர்ந்துவிட்டுப் போகிறது
ஒரு பட்டாம்பூச்சி.





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்