ஹைக்கூ கவிதைகள்

முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.


முதுகில் குத்தவில்லை.
மன்னித்து விடுகிறார் மகாத்மா.
அஞ்சல் நிலையம்.

'ம
ோகன்தாஸ் மதுக்கடை'
பணப்பெட்டிக்குள் அழுகிறார்
மகாத்மா.

பியானோ கட்டைகளில்
பிரதிபலிக்கின்றன
பூமகனின் பாடுகள்.

போகென்வில்லா
தோட்டத்தை வட்டமிட்டபடி
அநேக பட்டாம்பூச்சி நிழல்கள்.

மாணவர்கள் இல்லாத வகுப்பில்
வாய்ப்பாடு பயில்கிறது
மௌனம்.

தேசியகீதம் பாடியவுடன்
எழுந்து நின்றிடும்
பாரிச நோயாளியின் மனத்திடம்.

வாசிக்க மனமின்றி
நூல்நிலையத்திற்குள் பிரவேசிக்கும்
மின்வெட்டு .

ன்னொரு வசந்தகாலம்
என் ஊரை நெருங்குகையில்....
அடே! இன்னும் காகிதப்பூக்கள்....

டக்கம் செய்ய முற்படுகையில்
அப்பாவை கடைசியாக பார்க்கிறது
கதிரவன்.

ரைக்குறையாய் யாசகனின்
பாத்திரத்தை நிரப்பி
நின்று விடுகிறது மழை.

ருள் சூழ்ந்ததும்
புரட்ட முடியவில்லை மின்விசிறிக்கு
புத்தகங்களின் பக்கங்களை.

குரங்குகள் குதிக்கையில்
ஆடுகிறது மரத்தூளி
தூரத்தில் கல்லுடைக்கும் தாய்.

கள் பிறந்தநாளுக்கு புத்தாடை.
ஓவியக் கல்லூரி மாணவர் முன்
நிர்வாணமாக நிற்கிறாள்.

திடீரென்று மோதுகிறது
பார்வையற்றவன் சாலையை கடக்கையில்
தூரத்து ஆம்புலன்ஸ் சத்தம்.

ற்றிய குளத்தில் நீர்வரத்து.
விட்ட இடத்திலிருந்து தொடரும் தவம்.
ஒற்றக் கால் கொக்கு.

வியனின் தியானத்தை கலைத்து
குறுக்கும் நெடுக்குமாய் பறக்கும்
பட்டாம் பூச்சி.

றி வரும் நிலவை
இழுத்துச் சென்று தள்ளிவிடுகிறது
கயிறறுந்த குடத்து நீர்.

தோற்கிறான் சிறுவன்
ஆறு வித்தியாசங்கள் காணமுயன்று
இரண்டு மழைகளுக்கிடையே.

க்கத்தில்
தப்பி வந்த காட்டானை
புலிவேடக்காரன் நீர் அருந்துகையில்

ப்படியோ கலந்து விட்டது
ஒரு காகிதப்பூ
விலைமாது பூஜை செய்கையில்.
 



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்