ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் க.செல்வகுமார், நெய்விளக்கு.


வெள்ள நிவாரணம்
அலைமோதியது கூட்டம்
மதுபானக்கடையில்.!

பொது இடத்தில் புகைக்காதீர்
புகைத்தபடி சென்றது
அரசுப் பேருந்து!

தறிப்போனான்
உடல்நிலை சரியில்லா தாய்
ஓய்வூதியம்!

முன்னேற ஆசை
தெருவிளக்கில் படித்தாவது
எப்போது எரியும்.!

ழகான நீரோடை
குளிக்க முடியவில்லை
சாலையில் தேங்கியநீர்.!

விண்ணப்பித்தான்
ஓட்டுநர் உரிமைத்திற்கு
திருமணம்.!

தீக்குளிப்பு
மின்வெட்டின் போது
மெழுகுவர்த்தி.!
 

 



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்