பூனை
கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன்
பூனைகள்
இருக்கும் வீட்டில் தான் எலிகள் அதிகம் இருக்கின்றன
எலியை ஒழிக்க பூனை வளர்த்து
பூனைகள் பெருகிப்போச்சு
பூனைக்குட்டிகளோடு
எலிக்குஞ்சுகள்
விளையாடி மகிழ்கின்றன
தாய்பூனையின்
"மியாவ்" ஓசை கேட்டவுடன்
போய்பதுங்கி விடுகின்றன
இது எலிகளின் மரபில் பதிவான
பூனை அச்சம்
ஆனாலும்
பூனை குறுக்கே போனால்
திரும்பி வந்து விடுகிறானே
ஓ...!
அதுவா?
அது
மடமை அச்சம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|