ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் குமார்
சேகரன், மலேசியா.
மலைக்கோயில்
பயணம்
பாதையை மறைத்தபடி
மேகம்.
மெல்லிய
காற்று
குளத்தை கடந்து போக
அசைகிறது சூரியன்.
தினம்
அரிசியைத் தூவ
முதலில் சிட்டுக் குருவிகள்
இப்போது ஒரு பூனை.
பூவொன்றைப்
பறிக்கிறேன்
கீழே விழுகிறது
பட்டாம்பூச்சியின் சிதைந்த இறக்கை.
கல்
மேல் விழ
காயமின்றி நகர்கிறது
காற்றில் இலை.
இடுகாட்டில்
பூங்கா
இங்கு வர பிறக்கிறது
பிறப்பு பற்றிய கவிதை.
படுக்கையில்
இருமும் தாத்தா
அடிக்கடி கேட்கிறார்
இறைவனிடம் மரணம்.
பூங்காவில்
இருக்கை
சண்டையிடும் காதலர்கள் நடுவில்
உதிர்கிறது வெள்ளைப்பூ.
இருள்
மெல்ல சூழ
அடர்ந்த காடு
பூச்சிகளின் வசம்.
பட்டாம்பூச்சியை
பிடிக்கிறேன்
வெளியே வருகிறது
எனக்குள் இருக்கும் மென்மை.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்