ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் அன்பழகன்ஜி
நிழலுக்குள்
நுழைந்ததும்
காணாமல் போனது
நிழல்
ஒவ்வொரு
பறவைக்கும்
வெவ்வேறாய் இருக்கிறது
வானம்
சீரற்ற
காற்று
தேனுறிஞ்ச திண்டாடுகிறது
பட்டாம்பூச்சி
உடலின்
நாற்றத்தை
பிடித்து வைத்திருக்கிறது
உயிர்.
ஓடியது
நிலவு
காணாமல் போகிறது
மேகங்கள்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்