ஹைக்கூ கவிதைகள்
முனைவர் வே. புகழேந்தி,
பெங்களூரு.
பாய்
விரித்து படுத்திருக்கிறது
கூரை மேலிருந்து விழுந்த
வெய்யில்.
போக்குவரத்து
நெரிசல்
தடையின்றி நடக்கிறது
எப்.எம். வானொலி நிகழ்ச்சி.
இலக்கண
நூலை புரட்டி
இரட்டைக்கிளவி கற்பிக்கும்
இல்லத்து மின்விசிறி.
பெய்யும்
மழையில்
நனைந்தவாறே சுடுகிறது
வெய்யில்.
தூங்கும்
குழந்தை.
தொட்டிலை ஆட்டியதும் தவறி விழும்
தாலாட்டு.
மெல்ல
ஆறுகிறது
கொடிய துப்பாக்கிச் 'சூடு'
அளித்த காயம்.
ஊனமுற்ற
மின்மினி
வழி நடத்திடும்
மூன்றாம் பிறை.
உதிரிப்பூக்களை
கூட்டி எறிந்த முறத்தில்
தங்கி விடுகிறது வாசம்.
தொழிற்சாலை
கரும் புகை
மெல்ல மறைகிறது
வானவில்.
உண்ணுகிறான்
திண்ணையில் அமர்ந்த யாசகன்
நாய்க்கு உணவளித்து.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|