ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் க.செல்வகுமார், நெய்விளக்கு.

கிராமத்தினூடே சாலை
முக்கிய தேவைதான்
விவசாய நிலம்!

பாதிநேரம் ஓய்வு
வேலைநேரத்தில்
மின்சாரத்திற்கு!

றையும் கதிரவன்
மரத்தின் பிரிவு
நிழல்!

றித்த தாமரை மொட்டு
மலரும் முன்னே
பாலியல் வன்முறை!

நீர் வீழ்ச்சி
கண்ணைக் கவரும் மலை
எதிர்கால சாலை!

புதிய காந்தி நோட்டு
நிறம் மாறியது
கருப்பு!

றவைகள் சரணாலயம்
பறந்து சென்றது
இறகுகள் மட்டும்!
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்