ஹைக்கூ கவிதைகள்

கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்

ழம் தெரியாத கடல்
மிதக்கும் கட்டுமரங்கள்
உயிர்வலியின் தேடல்கள்

மீனவன் விரித்த வலைக்குள்
மீன்களின் துள்ளல் தெரிகிறது
மெல்ல மெல்ல மறையும் சூரியன்

காளான் முளைத்த தோற்றமுடன்
காதலர்களுக்கு புகலிடங்கள்
கட்டுமரங்களின் வாழ்வு

டுக்கடலில் அள்ளிக் குவித்தாலும்
தரகனின் வட்டிக்கே மிஞ்சவில்லை
விசைப்படகு வாழ்க்கை

மீனின் படத்தையே
மீண்டும் மீண்டும் வரைகிறார்
மீனவப்பள்ளி ஓவிய ஆசிரியர்

லைவீசும் மக்களுக்கு
விலைபேசத் தெரியவில்லை
வினாக்குறியாகும் வாழ்வு

நெஞ்சம் கனத்த
அன்றாட நகர்தலில் வாழ்கின்றனர்
நெய்தல்நில மக்கள்
 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்