ஹைக்கூ கவிதைகள்

முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.

சாளர வழிக் காற்று
தாளை புரட்டி கவிழ்க்கையில்
மறைந்திடும் மங்கையின் நிர்வாணம்.

ழைய இருளை ஒத்திருக்கிறதே
மின்வெட்டுக்கு பிறகு வந்த
புதிய அந்தகாரம்?

விட்டு விட்டு பெய்திடும்
மேற்கு தொடர்ச்சி மலையில்
மழை.

வாடிய மரத்தில்
வழித்தவறிய பறவை
வசந்தத்திற்கான காத்திருப்பு.

மீண்டும் கூடி விடுகிறது
தொடர்வண்டி ஒளி
கிழித்த இருள்.

ணைத்து பிரிக்கிறது
பயணிகளை -
இணையா தண்டவாளம்.

மேக மூட்டம்.
தோழனின்றி தவிப்பு
கம்பி மேல் ஒற்றை அணில்.

ருமகள் வரவு.
அழிந்தும் அழியாமல் சமையலறையில்
அம்மாவின் கைரேகைகள்.

திறந்த மலரை
காணாத பட்டாம் பூச்சி
மூடுபனி.

கார்கால முகிலினங்கள்.
முதல் துளி விழுகிறது
ஓவியப் பலகை மேல்.

தொடர்வண்டி பயணம்.
ஓடிவரும் மரங்களில்
அமர்ந்து பாடும் குயில்கள்.

வெளிச்சம் போடும்
முகப்பு கண்ணாடி துடைப்பானுக்கு
மின்னல்.

 


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்