ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் அன்பழகன்ஜி
போர்த்திக்கொள்ளும்
அப்பாவின் வேட்டியில்
வியர்வை மணம்.
இலையைக்
கொத்தி
ஏமாந்து போகிறது
தொட்டி மீன்
வரிசை
மாறாமல்
வயல் வரப்பில் நிற்கின்றன
பனை மரங்கள்
கடைசி
வரையிலும்
கூடவே பயணிக்கிறது
குறுக்கே வந்த பூனை.
தலையை
சீவியதும்
விழித்துக் கொள்கிறது
பனங்காய்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்