லிமரைக்கூ...
கவிஞர் தமிழ்தம்பி
எங்கோ
ஒரு பறவை
சலனமின்றி இரவில் அழகாய் மீட்டுகிறது
இழந்த என் உறவை
கழுத்திலிருந்து
அறுந்த பாசி
உடலில் படிந்த கறையை கழுவியதும்
கோர்த்தபடி இருக்கிறாள் வேசி
பொழுது புலர்ந்த காலை
அம்மத்தா கதவின் தாள் திறக்காமலிருக்க
வாங்கி வந்தேன் மாலை
அரசிடம்
கிடைத்ததோ பத்திரம்
கேட்பாரற்று கிடந்த என் படைப்புகள்
அதிக விலையானதோ விசித்திரம்
ஜாதி
மறந்த காதல்
சாமிக் குற்றம் வதந்தி பரவிட
இருவூரும் கொண்டது மோதல்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்