ஆற்றாமை
கவிஞர் ச.கசேந்திரன்
ஒற்றை வார்த்தை பதில்களில்
ஒளிந்திருக்கிறதுன் ஆற்றாமை
உயரத்திலிருப்பதான உன்
கற்பனையின் மெய்த்தன்மையை
கசடறனின்று
நோக்கப்போவதில்லை
வீசியெறிந்த குப்பை
காற்றின் வலிமையால்
கலசத்திலிருப்பதில்
கவலையுமில்லை
களிப்புமில்லை யெனக்கு!
நினைவுக் கிடங்கின்
மென்வெளிச்சப் பூக்கள்...
மின்மினிப் பூச்சிகளான
வசந்த நினைவுகளென்னை
ஏகாந்த தேசத்தின்
அரசனாக்கி விடுகின்றன...
தத்துவாசாரங்கள் ஏதுமற்ற
குப்பைகுறித்தெல்லாம்
குறைபட நேரமில்லையங்கே!
வன்மமான உன்னாற்றாமையை
உள்வாங்கி இரசிக்கப் பழகிக்கொண்டனெக்கு
வாழ்க்கை இனிக்கிறது
இப்போதும்...
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்