அன்று இன்று

அருள்.எம்.வர்மன், லால்புரம்

ஆற்று நீரில்
விளையாடினோம்
மணல வீடு
கட்டினோம் ...
வாய்க்காலில்
கெண்டை மீன்
பிடித்து
உறவாடினோம்...
இப்பொழுது மிச்சம்
ஏதுமில்லை
கறுப்பு நிற
திராவகமே ஓடுகின்றது
கேட்டால் கச்சா எண்ணெய்
என்கின்றனர்
ஒன்றுமே புரியவில்லை
வயல் பற்றி எரிகின்றது

எங்கள் வயிறும்தான்...
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்