ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் க.செல்வகுமார், நெய்விளக்கு.


டவுள் சிலைகள்
விசா இல்லாமல் வெளிநாடு
கடத்தல்!

ட்டாசு தயாரிப்பு
சிதறிப் போனது
சிறுமியின் கனவு!

ண்ணைக் கவரும் கட்டிடம்
வளைந்து நெளிந்திட்ட ஆறு
ஆக்கிரமிப்பு!

திர்ந்த சருகுகள்
மதிக்கப்படுவதில்லை
முதியோர்!

திக புத்தகங்கள்
விற்பனை ஆகிறது
கல்வி!

டைவிடாது மழை
பாதிப்பில்லை விற்பனைக்கு
மதுபானக்கடையில்!



 



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்