ஹைக்கூ கவிதைகள்

முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.


ய்வுக்குப் பின்
ஒட்டிக்கொள்கின்றன
முழு நிலவின் ஒளித்துண்டுகள்.

பாசத்தையும் ஒப்படைத்து
வெறும்கையுடன் திரும்புகிறாள்
வாடகை தாய்.

ல்ல மேய்ப்பன்' தேவாலயத்தை
கடந்துச் செல்லும்
ஆயனில்லா ஆட்டு மந்தை.

'சுமங்கலி', 'விதவை'
இரண்டு முகமூடிகளை விட்டு
கடலுக்குள் செல்லும் மீனவன்.

ல்லெறியும் சோம்பேறி -
பாதுகாப்பு வளையங்கள் அமைத்து
குளத்தை காத்திடும் நீர்.

புலி வேடம் தரித்தவன்
பருகும் நீரை
ஏக்கத்துடன் பார்க்கும் காட்டானை

'பேரங்களை' ஒதுக்கி
பணத்தை எண்ணுகிறான்
தள்ளுவண்டி காய்கறி வியாபாரி.

பாலியல் தொழிலாளி -
கண்களை மட்டுமே தழுவுகிறது
உறக்கம்.

காலையில் விரித்த ஒளியை
கதிரவன் மாலையில் சுருட்டிட
பல்லாயிரம் சிராய்ப்புகள்.

றுதி ஊர்வலம் -
மயானம் வரை துணை வந்த
பட்டாம்பூச்சியும் பறந்து விடுகிறது.

 

 


 



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்