ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் நாகை ஆசைத்தம்பி, கோவை

றுந்துப்போன செருப்பு
அழகாய் நடைப்போடுகிறது
செருப்பு தைப்பவன் குடும்பம்,,!

யர்ந்த கட்டிடங்கள்
உருக்குலைந்து கிடக்கிறது
தொழிலாளி உடல்நலன்,,!

தொழிற்சாலை புகை
வேகமாய் பரவுகிறது
தொற்று நோய்கள்,,,!

ருவமழை
நிரம்பி விட்டது
நோயாளிகள் எண்ணிக்கை,,!

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்