ஹைக்கூ கவிதைகள்
கவிச்சுடர்
கா.ந.கல்யாணசுந்தரம்
விரல்
நுனியில் வாய்ப்புகள்
நழுவிய போது
உள்ளங்கை வெற்றிடமானது
புனைவுகளால்
அத்தியாயங்கள்
புரிதலைத் துறந்தாலும்
விருதுக்கான நாவலானது
அணையா
தீப்பிழம்பு
நெஞ்சகத்தே இருந்தாலும்
பற்றி எரியவில்லை நினைவுகள்
காட்சிப்
பொருளாகும்
யதார்த்த வாழ்வில்
நீர்த்துப் போனது உறவுகள்
இரவின்
கரிய பந்து
காணாமல் போனது
விடியலின் வாயிலில்
பன்முகத்
தோற்றம் கொண்டு
நகைத்தபடி நகர்ந்தது
சோர்வின் சுயரூபம்
நன்கூரமிடாத
படகொன்றில்
நினைத்தபடி பயணிக்கின்றன
இயங்காத துடுப்புகள்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|