தன்முனைக்கவிதைகள்

கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்

னது தோட்டத்தில்
பாக்குமரத்தின் மீது வெற்றிலைக்கொடி
தேடிக்கொண்டிருக்கிறேன்
சுண்ணாம்பை

சோளக்காட்டு பொம்மைக்கு
எனது சட்டை அழகு
ஆனால் அடையாளம் தொலைத்து
நான் விண்ணுலகில்

நேற்றைய இரவுக்குள்
எப்படியோ வளர்ந்துவிட்டது
அவளைப்பற்றிய
அன்போடு நம்பிக்கையும்

பறவைகள் வந்தமரும்
ஆலமரம்
அதன் விழுதுகளில் ஆடுகிறது
எனது பால்ய நினைவுகள்


 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்