ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் அன்பழகன்ஜி

நீரற்ற குட்டை
வானம் பார்க்கும்
மீன் முட்டை

டர் இருட்டில்
தனிமைக்கு துணை
விடாத பயம்.

நீல வானத்திற்கு
சாமரம் வீசுகின்றன
கள்ளப் பருந்துகள்.

ஞ்சள் அலையடிக்கும்
சணல் பூத்த வயல்கள்
இளவேனில் காற்று.

லைவலியில் தாத்தா
துடிதுடித்துப் போகிறார்
பாட்டியம்மா.

வாயிலுள்ள மீனை
உண்ணாமல் வைத்திருக்கிறது
கொக்கு பொம்மை.

பின்பனிக்கால உதயம்.
கால்களில் பனித்துளிகள் உரச
தலைநிமிறும் புற்கள்.
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்