ஹைக்கூ கவிதைகள்

முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.

டிசம்பர் பூவை
பட்டாம்பூச்சி இரசிக்கையில்
மெல்ல மலர்கிறது ஜனவரி.

ொடர்வண்டி வேகமெடுக்க
பின்தங்கி விடுகின்றனவே
துரத்திய மழைத்துளிகள்.

ங்கோ நனைந்ததற்கு
என் வீட்டு சன்னலில்
கரைகிறது காக்கை.

வற விட்டுச் செல்லும்
கொண்டு வந்த பூங்காற்றை
கோடை மழை.

ற்றையடிப் பாதையில்
இரட்டை மாட்டு வண்டி
எழுதிச் செல்கிறது ஹைக்கூ.

நி
னைவு நாளன்றும்
பூ விற்கிறாள்
மணக்கும் கணவன் நினைவு.

ேற்று விட்டுச் சென்ற
சொச்சத்தையும் வீசிச் செல்கிறது
மாலைத் தென்றல்.

ுளசி மாடத்தை
சுற்றி வருகிறது
இல்லத்தரசியின் கூந்தல் நீர்

லைகளுக்கு சுனாமி பயிற்சி
மேடையமைக்க
உள்வாங்கிடும் கடல்.

லைவனின் மறைவு
பூதவுடலில் தீக்குளிக்கும்
சந்தன மர வாசம்.

ானவில் மெல்ல மறைய
பரஸ்பரம் முகம் பார்த்திடும்
சூரியச் சந்திரன்.

ணையுமுன் பிரகாசம்
மெல்லக் கரையும் மணியோசை
தூரத்து தேவாலயம்.
 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்