நம்பிக்கை
கவிஞர் கஜேந்திரன் சந்தானம்
ஆக்கத்தின்
நிறைவு..
அதிக வலிகள் நிறைந்தது!
அபகரித்துக் கொண்டவனுக்கு
அதுவெறும் சடங்கு!
உழைப்பைத் திருடுபனுக்கு
அதுஅவன் உழைப்பு!
மனிதம் திருடுபவனுக்கது
மறுதலைமுறைக்கானது!
தலைவன்
நட்பு
இன்னும்பல...
மாயச்சொற்களுக்குள்
மறைந்து கிடக்கின்றன
ஒட்டுண்ணிகளையும் சேர்த்து
விழுங்கும் மலைப்பாம்புகள்!
தனித்திரு பசித்திரு என
வள்ளலாரே
வழிகாட்டியாயிருக்கிறார்
இப்போது!
நாலாபக்கத்திலிருந்தும்
வார்த்தை
வெடிகுண்டுகளை வீசும்
நட்புறவுத்
தீவிரவாதிகளிடமிருந்து
தப்பிப்பதே
தலையாய நிலைஇப்போது..
இன்னொரு
ஆக்கம்..
உருவாக்கம்
முடியுமென்ற நம்பிக்கையில்...
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|