ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் இரா.இரவி
ஓடாத
திரைப்படத்தையும்
ஓட்டி விடுகின்றனர்
எதிர்ப்பால் !
பெரிய மனிதர்களையும்
மாய்த்துவிடுகிறது
சிறிய கொசு !
பெட்ரோல் விலை உயர்வை
உணர்த்திடும் அமைச்சர்
மிதிவண்டி ஊர்வலம் !
கண்ட இடமெல்லாம்
கடவுள் படங்கள்
கந்துவட்டி அலுவலகம் !
பஞ்சமில்லை பக்திக்கு
பத்தி மணம் வீசியது
பத்து வட்டிக்காரன் வீடு !
ஆசையை அழிக்க வேண்டிய
சாமியார்களுக்கு பேராசை
அரசு இடம் ஆக்கிரமிப்பு !
வானத்தை வில்லாய்
வளைக்க வேண்டாம்
சாலையை சரி செய்யுங்கள் !
குறைந்தபட்ச இருப்புத் தொகை
தண்டத்தொகையில்
மூழ்கியது வங்கிக்கணக்கு !
கொள்ளிக்கட்டையை
தலையில் வைத்த கதையானது
பணம் மதிப்பிழப்பு !
படு பாதாளத்தில் தள்ளியது
பொருளாதாரத்தை
பணம் மதிப்பிழப்பு !
மூடு விழா நடத்தியது
சிறு தொழில்களுக்கு
பணம் மதிப்பிழப்பு !
பல உயிர்களை
பலி வாங்கியது
பணம் மதிப்பிழப்பு !
ஒழியவில்லை கறுப்புப்பணம்
ஒழிந்தனர் வெள்ளைமன மனிதர்
பணம் மதிப்பிழப்பு !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|