ஹைக்கூ கவிதைகள்
முனைவர் வே. புகழேந்தி,
பெங்களூரு.
வாசல் கதவைத் திறந்ததும்
அறுந்து விழுகிறது தோரணம்
மேல் பின்னியிருந்த சிலந்திவலை.
அணையவும் எரியவும்
ஏக காலத்தில் பயிற்சி பெறும்
காற்றிடம் நெருப்பு.
திறக்கப்படும் நூல் நிலையம்
தத்தம் இடங்களுக்கு திரும்புகின்றன
வாசித்துக் கொண்டிருந்த கரப்பான்கள்
பெரிதாக விளம்பரம் -
போனால் போகட்டுமென்று
தலைக் காட்டிய புயல்.
பாலியல் தொழிலாளி
கண்களை மட்டுமே தழுவிடும்
நித்திரை.
வறியவன் வருந்துகிறான்
இடைவிடா மழையால் அழிந்ததே
வறுமைக் கோடு.
ஒழுகும் கூரை
இரவெல்லாம் உறங்கவிலை
தொடர் மழை.
'நல்ல
மேய்ப்பன்' தேவாலயத்தை
கடந்துச் செல்லும்.
ஆயனில்லா ஆட்டு மந்தை.
'சுமங்கலி', 'விதவை'
இரண்டு முகமூடிகளை விட்டு
கடலுக்குள் செல்லும் மீனவன்.
வீசாத வலைகளில்
தங்கி விடுகின்றன
புயல் எச்சரிக்கை அறிவிப்புகள்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|