சுத்தமான வீரன் நீ

அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்

சுத்தமான வீரன்நீ
சொந்தநலன் நோக்காத     ( சுத்தமான...)

சுவிஸ் வங்கிப் பெட்டகத்தின்
சுவையறியாத் தலைவன்நீ
புவித்தலைமைக் கேற்றவனாய்ப்
போற்றுதற் குரியவன்நீ      ( சுத்தமான...)

வெளிநாட்டு வைப்புகளில்
வேறுவேறு பெயர்களிலே
களிப்போடு பணஞ்சேர்த்த
கயவர்கள் மத்தியிலே         ( சுத்தமான...)

சொந்தமனை யாளுடனே
சொத்தான மக்களையும்
இந்தமண்ணுக் கிரையாக்கி
இதிகாசம் படைத்திட்ட   ( சுத்தமான...)

கதிரைக்கும் காசுக்கும்
கண்ணியத்தை விலைபேசும்
மதிகெட்டோர் மத்தியிலே
மனந்தளம்பா திருந்திட்ட    ( சுத்தமான...)

ஆட்சியாளர் கைகளுக்குள்
அகப்பட்ட நரிக்கூட்டம்
சூழ்ச்சிசெய்ய போர்முனையில்
தோல்விகளைச் சந்தித்த    ( சுத்தமான...)

தன்குடும்பம் வாழுதற்குத்
தன்னினத்தை அடகுவைத்த
சின்னமனம் கொண்டவர்கள்
தீயவர்கள் மத்தியிலே         ( சுத்தமான...)
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்