தியாகச் செம்மல்கள்

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

ண்ணல் எங்கள் தேசியத் தலைவர்
         ஆற்றலைக் கண்டு நடுங்கிய அரசாங்கம்
திண்ணம் கொண்டு திட்டமும் தீட்டியே
         திக்குகள் சென்று உதவியும் கேட்டதாலே
உண்மைகள் அறிந்தும் தீமைச் செயலுக்கு
         உலக நாடுகள் கைகோர்;த்து நின்றதாலே

கண்ணியம் கடமை கட்டுப் பாட்டுடனே
         களத்தில் நின்றோர்; அவர்களின் தாக்குதலால்
எண்ணம் முழுவதும் தாயகச் சுதந்தரத்தை
         ஏற்றிய மாவீரர் சொர்க்கம் எய்தினரே
மண்ணில் மைந்தன் மாவீரர் தலைவர்
         மக்களும் சேர்ந்து தியாகம் புரிந்தாரே!
விண்ணவர் வாருங்கள் நீதியைத் தருவீரா?
         விரைந்து தமிழரின் அநீதியைப் போக்குவீரா?

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்