ஹைக்கூ கவிதைகள்

நாகை ஆசைத்தம்பி, கோவை


ருவமழைக்காலம்
தேங்கிக்கிடக்கிறது
முக்கிய கோப்புகள்

ிண்ணொளியிடம்
களவுப்போகிறது
பனித்துளி

த்தியின்றி இரத்தமின்றி
யுத்தமொன்று நடக்குது
லேசர் அறுவை சிகிச்சை

ட்டப்பந்தயத்தில்
ஊன்றுக்கோலுடன்
பார்வையாளன்

னைத்து கட்சிகளும்
ஒரே கொடியின் கீழ்
சுதந்திர தினம்

வாசலில் பிச்சைக்காரர்
உள்ளேயிருந்து குரல்
வீட்டில் ஆளில்லை

கை கடைக்காரர்
விபத்துக்குள்ளானார்
சேதாரம் அதிகம்

நிறங்களை
நகல் எடுப்பதில்லை
நிழல்கள்

ிளையாடுமிடத்தில்
விட்டுவந்தார்கள்
வியர்வை துளிகள்




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்