ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் வேலூர் இளையவன்
எப்படிச்
சொல்வது தெரியவில்லை
இரவெல்லாம் படும் தவிப்பு
காற்று
மேலேறி அமர்ந்து கொள்ள
அசைந்தசைந்து நடந்து
யானை ஆனேன் குழந்தைக்கு
கண் கால் அலகென
வரைந்து முடிக்க தானாய்
முளைத்தது சிறகு
அழகிய மலர் வரைந்து
முடிக்க வந்து அமரும்
வண்ணத்துப் பூச்சி
கடும் வெயில்
ரசிக்கிறேன்
வழியும் அவள்அழகு
புல்லின் பனித்துளியாய்
நெஞ்சில் அமரும்
உன் கவிதை
எங்கேயோ பெய்யும் மழை
மனக் குமுறுலை எதிரொலிக்கும்
இடியாய் வானம்
பாஷோவின் தவளை
நீர் நிறைந்த குளம்
குதித்தது ஹைக்கூ
பெயரற்றுப் போவதில்
மறைந்திருக்கு
நெருக்கத்தின் ரகசியம்
தேன் ஒழுகப் பேச்சு
மெல்ல நழுவியது
ஆடை
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|