தினம் நகரும் வாழ்க்கை

அருள்.எம்.வர்மன்
 

போக்குவரத்தினூடே
நெடியப்பயணம்
வங்கிகளின்
கடனழைப்புக்கள்
அலுவலகத்தின்
அலைகழிப்புகள்

ஒருபொம்மை
இரவாய்
ஊர்கிறதுஇரவு...

விடியப்போகிறது...
இருந்தும்
இந்தநாளை
நம்பிக்கையுடன்
எதிர்நோக்கவைப்பது

உன்புன்னகையும்
வெளியேசிந்தும்அந்த
சாரலும்தாம்..!
 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்