வாழவைக்கும் காற்றாய் வாவா
பாவலர் கருமலைத்தமிழாழன்
எதற்கிந்த
சீற்றமுடன் வீசு கின்றாய்
எல்லாமும் அழிப்பதற்கா புயலாய்
வந்தாய்
பதவியிலே இருப்பவர்கள் நாட்டை யின்று
பாழ்செய்து வளம்சுருட்டிக் கீழே
தள்ள
மதவெறியர் ஒருபக்கம் எரித்து நிற்க
மனங்களெல்லாம் தன்னலத்தால்
அழித்து நிற்க
விதவிதமாய்ப் பெயர்களிலே வந்து நீயும்
வீரத்தை யார்புகழ காட்டு கின்றாய்
!
வழிவழியாய்
வரவேற்பு கொடுப்ப தற்கு
வானத்தில் விழிவைத்துப் பார்த்தி
ருக்கப்
பொழியாதோ எனயேங்கிக் காத்தி ருக்கப்
பொழியாமல் வயல்களினைக் காய
வைத்துக்
குழிபறிக்கும் கொடுங்கோலர் ஆட்சி தம்மைக்
கூடிநின்று விரட்டாத மக்கள்
தம்மைப்
பழிவாங்க வேண்டுமென்றா புயலாய் மாறிப்
பகலிரவு பார்க்காமல் கொட்டு
கின்றாய் !
பல்லாண்டாய்
வளர்த்திட்ட மரங்கள் சாய்த்தாய்
பரிதாப ஏழையரின் குடில்கள்
சாய்த்தாய்
பொல்லாதார் நாடழித்தல் போதா தென்று
பொழிந்துநீயும் ஊர்களினை
அழிக்கின் றாயே !
கொல்கின்ற குணமெதற்கோ இரக்கந் தன்னைக்
கொண்டிருக்கும் தென்றலாக மாற்றம்
கொள்வாய்
நல்லவரால் இவ்வுலகம் வாழ்தல் போன்று
நறுங்காற்றாய் வீசியெம்மை வாழ
வைப்பாய் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|