காதல்.........
ராம்ப்ரசாத்
நிலம்
பார்த்து
நீ
நடக்கிறாய்...
உன்
பூ
அழகை
நிலம்
ஏற்றுக்கொள்கிறது...
உன்னைப்
பார்த்து
நான்
நடக்கிறேன்..
என்
காதலை
நீ
ஏற்றுக்கொள்வாயா?...
உன்னைக்
கட்டிக்கொள்ளமுடியாத
ஏக்கத்தைத்தான்
கொடியில்
காயும்
உன்
துப்பட்டாவை
கட்டிக்கொண்டு
தீர்த்துக்கொள்கிறதோ
மழை...
அனுதினமும்,
எரியும்
விளக்கை
அணைத்துவிட்டு
படுக்க
போய்விடுவாய்...
இங்கு
நான்
எரிய
தொடங்கிவிடுவேன்...
சாலையில்
நீ
கடந்து
போன
பின்னும்
அங்கேயே
திரிகிறேன்...
இந்த
கட்டிடங்களின்
நிழலில்
தொலைந்து
போன
உன்
நிழலைத்
தேடியபடியே...
மனிதர்களின்
கால்தடம்
பட்டால்
புல்
கூட
முளைக்காதாம்...
உன்
காலடித்தடம்
ஒவ்வொன்றுக்கும்
என்
நெஞ்சில்
ஒரு
காதல்
முளைக்கிறதே...
நீ
தேவதை
என்பதற்கு
இந்த
சாட்சி
போதாதா?...
பெண்களின்
வெட்கம்
அழகானது...
உன்னில்
அழகு
வெட்கமானது...
தலைகுனிந்து
உன்
வெட்கத்தை
பூமிக்கே
பரிசளிக்கிறாய்...
பூமிக்கு
நான்
என்னையே
பரிசளிக்கிறேன்..
ஒரே
ஒரு
முறை
நான்
பார்க்க
தலை
நிமிர்ந்துதான்
வெட்கப்படேன்...
உன்
வெட்கமென்ன
மழைக்கால
மேகமா?
ஒவ்வொரு
முறை
நீ
வெட்கப்படும்
போதும்
என்
இதயத்தில்
இடி
இடிக்கிறதே...
'இந்த
வண்ணத்துப்பூச்சி
பறக்காதா?'
என்று
உன்னைப்பார்த்து
ஒரு
வண்ணத்துப்பூச்சி
என்னிடம்
கேட்டது...
பூவென
நினைத்து
வண்ணத்துப்பூச்சிகள்
உன்னைத்
தொடரும்...
வண்ணத்துப்பூச்சியென
நினைத்து
நான்
உன்னைத்
தொடருவேன்...
ramprasath.ram@googlemail.com
|