ஹைக்கூ கவிதைகள்

கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்,  செய்யாறு

க்களின் தாகம்
கடத்தப்படுகிறது
மணல் ஏற்றிய லாரி

திரும் இலைகளில்
ஒளிந்திருக்கிறது
தியாகத்தின் பிறப்பிடம்

முகாரி இசைத்தபடி
எரிந்து மாண்டது
மூங்கில் காடு

தேனீக்களின் முகவரிகளை
சேமித்து வைத்துள்ளன
பூங்காவின் மலர்கள்

சுமைகள் என்றும் சுகமானவை
உணர்த்தி மகிழ்கின்றன
பனிசுமக்கும் புல்வெளிகள்

யரம் பொருட்டல்ல
உதவியுடன் இருத்தல்வேண்டும்
அறிவுறுத்தும் போன்சாய் மரங்கள்




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்