வானம் தேடும் முகில்கள்

கவிஞர்  புதுவைத் தமிழ்நெஞ்சன்

கிழிந்து கிடக்கிறது
வாழ்க்கை வானம்
மின்னல் உசியால்

வெடித்து கிடக்கிறது
வரண்ட நிலமாய்
பரிதி புன்னகையால்

காடுகள் எல்லாம்
களவு போனது
கண்ணீர் பெருக்கம்

நாடுகள் எங்கும்
சாலை பாம்புகள்
மலைகள் விழுங்கின

மாரி நீரை
ஏரியில் தேக்க
ஏரியைத் தேடுகிறான்

தாகத்திற்கு நீர்
கேட்டு வந்தவன்
நாவரண்டு கிடக்கிறான்

யற்கை தாயை
காக்க மறந்ததால்
இன்னலில் தவிக்கிறான்

ருப்பது எல்லாம்
பொதுவாய் ஆனால்
துன்பம் தொலைக்கிறான்

மேடு பள்ளம்
மட்டமாய் ஆனால்
மதியோடு வாழ்கிறான்

முகில்கள் இன்றி
முழுமதி காட்சி
மனத்தை மயக்குகிறது

விண்மீன் கூட்டம்
வெண்ணிலா சுற்றி
வேடிக்கை பார்க்கிறது

டியும் இடித்து
மழையும் பொழிந்து
மின்னல் படமெடுக்கிறது

ரவு வானம்
இன்ப உணர்வை
நெஞ்சுக்குள் பதிக்கிறது

வாழும் போதே
வரலாறாய் வாழ
வழியும் இருக்கிறது

 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்