ஹைக்கூ கவிதைகள்

முனைவர் வே.புகழேந்தி, பெங்களூரு
 

ந்த பெயரிடப்படாத புயலுக்கு பலியோ/
கன்றெனும் பெயரில் நடப்படும்/
நாளைய மரம்?

றக்கும் நீர்க்குமிழியை
இரசிக்கும் குழந்தையின் கையில்
உடைந்த பலூன்.

தே நிலா -
அம்மா இறந்ததால்
இன்று சற்று அழுக்கு.

லரை அலட்சியம் செய்கிறதே
பறக்கும் முத்தத்தை கவ்விச்சென்ற
பட்டாம் பூச்சி.

ழி மறிக்கப்படுகிறது
அவிழ்ந்த மொட்டுக்களால்
வண்டின் ரீங்காரம்.

சிறகுகளின் ஆசியுடன்
உயரே பறந்திடும்
சுதந்திரம்.

லையில் சிக்கிடும்
ஆக்டோபஸ் ஆக நினைத்த
சிலந்தியின் ஆசை.

ருப்புப் பாதையை கடக்கையில்
உருக்குலைந்த காற்று.
மோதிய தொடர்வண்டி.

தியானத்திற்கு அமர்கையில்
தலை விரித்தாடுகின்றன
தேவையற்ற எண்ணங்கள்.

தெய்வ தரிசனம் -
கூட்ட நெரிசலில்
உயிர் துறந்த ஆத்திகம்.

ணிக்கு திரும்புகிறது
மழை விடுப்பில் சென்ற
தென்றல்.

ன்னும் தேடுகின்றன
தம் நிழல் விழும் தலத்தை
முகிலினங்கள்.

 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்