பாரதி
தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
பாரதி
என்றொரு பாவலன் தோன்றினன்
பாரினிற் செந்தமிழ் பரந்தம்மா –
அவன்
தேரினிற் பற்றிய தீந்தமிழ் இருக்கையில்
சிந்தெனப் புதுக்கவி சிரித்ததம்மா
– ஒரு
தூரனைப் போலொரு தீட்டிய பாட்டினில்
சொல்லறம் நிலத்தினிற்
சிலிர்த்ததம்மா-கொடும்
நேரத்துக் காற்றினில் நீட்டிய வாளென
நின்றது மாகவி நீதியம்மா!
அக்கினிக் குஞ்சது பற்றியெ ரிகையில்
அவனியின் விடியலும் ஆனதம்மா –
நிதம்
துக்கிக் கிடந்தவர் துயிலினைக் கோதிய
தீந்தமிழ்ப் பாக்களாய்
ஆனதம்மா-வன்மைச்
செக்கில் உழன்றவர் செத்துக் கடந்தவர்
தேசத்தில் முரசமாய் ஆனதம்மா!-அறம்
விற்கத் துணிந்தவர் விரதமும் விடியலின்
வேரிற் பழுத்தது வேதமம்மா!
நற்றமிழ் சிந்தையின் நாதம் பிறந்தது
நானிலம் பாரதி நாற்றாச்சு-வெந்து
முற்றுங் கொடியவர் மூழ்கிய போதிலும்
மூச்சு விடியலின் ஊற்றாச்சாம் -
தமிழ்
பற்றிப் படர்ந்திடும் பந்தலின் கால்களில்
பைந்தமிழ்க் கப்புகள்
படர்ந்தாச்சாம்!
இற்றை வரைக்குமே எட்டய பாரதி
ஏட்டிலும் பாட்டிலும் எழுந்தானே!
(பாரதியார் பிறந்த தினம்:
11-12-1882)
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|